அரசு பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி
அரசு பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கங்காதேவி தலைமை தாங்கினார். உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் தமிழ்ச்செல்வன், செந்தமிழன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவிகள் அனைவரும் கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அருட்செல்வி, ராஜசேகர், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் தமிழாசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story