ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி


ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 20 Sep 2023 9:45 PM GMT (Updated: 20 Sep 2023 9:45 PM GMT)

ஊட்டியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

ஊட்டச்சத்து மாத விழா

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒரு மாத காலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 'தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023' விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருணா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பேரணியில் கலந்து கொண்டார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு பதாகைகள்

பேரணியில் அனைவரும் பல்வேறு ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து சேரிங்கிராஸ் வழியாக சென்று காபி ஹவுஸில் பேரணி முடிவடைந்தது.

முன்னதாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. மகாராஜ், துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) பாலுசாமி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, சமூக நல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஷோபனா, தாசில்தார் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story