தீபத்திருநாள் ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாள்: ஓ.பன்னீர் செல்வம் தீபாவளி வாழ்த்து


தீபத்திருநாள் ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாள்: ஓ.பன்னீர் செல்வம் தீபாவளி வாழ்த்து
x

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் தினமான தீபாவளிப் பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமால், அன்னை மகாலட்சுமி துணைடன், நரகாசுரன் என்ற கொடிய அரக்களை அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருநாள், ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது.

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்நன்நாளில் தனி மனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் தலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story