அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாரின் காரை முற்றுகையிட்ட ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்


அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாரின் காரை முற்றுகையிட்ட ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 16 Jun 2022 1:17 PM IST (Updated: 16 Jun 2022 1:24 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு எதிர்கோஷம் எழுப்பினர்.

சென்னை

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர் .முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த நிலையில் ஆலோசனையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.

எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முடிக்கப்பட்டு மூத்த நிர்வாகிகள் புறப்பட்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்."ஓ.பன்னீர் செல்வதால் வருவதால் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொள்ளவில்லை.

பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என ஜெயக்குமார் கூறினார்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அவரது காரை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

அ.தி.மு.க.வை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக கட்சி அலுவலகத்தின் வெளியே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.


Next Story