அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேனர் கிழிப்பு


அ.தி.மு.க. தலைமை  அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேனர் கிழிப்பு
x

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களில் ஓ பன்னீர் செல்வம் படம் கிழிக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, தனது ஒப்புதல் இன்றி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் செல்லாது எனவும் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த சூழலில், அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களில் ஓ பன்னீர் செல்வம் படம் கிழிக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story