அதிமுகவில் ஒற்றை தலைமை தேவையில்லை - ஓ.பன்னீர்செல்வம்


அதிமுகவில் ஒற்றை தலைமை தேவையில்லை - ஓ.பன்னீர்செல்வம்
x

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது,

* அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி

* தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்.ஜி.ஆர்

* ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது

* டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்தோம்

* 2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம்

* துணை முதல்-அமைச்சர் என்பது அதிகாரமற்ற பதவி

* பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன்

* ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை

* எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை.

* ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிர்வாகி மூர்த்தி

* என்னையும், தொண்டர்களையும் பிரிக்க முடியாது

* எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா?

* நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை

* பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது

* அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம்

* பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை

* அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை

* ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம்

* மீண்டும் ஒற்றை தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்' என்றார்.


Next Story