தேனி மாவட்ட கலெக்டருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு - தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை


தேனி மாவட்ட கலெக்டருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு - தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
x

தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து கலெக்டரிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

தேனி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கலெக்டரை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் கலெக்டரிடம் கேட்டறிந்தார்.

போடிநாயக்கனூர் தொகுதியில் உள்ள 10 முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு குறித்து கலெக்டரிடம் கேட்டதாகவும், குறிப்பிட்ட பிரச்சினைகளை களைவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


Next Story