ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்


ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
x

புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் வீரமணி உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினர், அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.


Next Story