நடிப்பில் ரஜினி, சிவாஜியை ஓ.பன்னீர்செல்வம் தோற்கடிப்பார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


நடிப்பில் ரஜினி, சிவாஜியை ஓ.பன்னீர்செல்வம் தோற்கடிப்பார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

நடிக்கச் சென்று இருந்தால் ரஜினி, சிவாஜி எல்லாரையும் ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்து விடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உசிலம்பட்டி ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது தொண்டர்களை நம்பி மட்டுமே எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கினார். எம்.எல்.ஏ ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுவதால் ஒரு பின்னடைவும் இல்லை.

பணத்தைக் கொடுத்து ஆள் பிடிக்கும் செயலில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். பணம் பாதாளம் வரை பாயும். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனுக்கு கட்சியில் இடமில்லை.

நடிக்கச் சென்றிருந்தால் ரஜினி, சிவாஜி எல்லாரையும் ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்து விடுவார். அவருக்கு சொல்புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை. ஓபிஎஸ் உத்தமர் போல நடிக்கிறார், ஆஸ்காரை மிஞ்சும் அளவுக்கு பிரம்மாதமான நடிகர் ஓபிஎஸ்.

தர்மயுத்தம் தொடங்கி விட்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே இல்லை என வாக்குமூலம் அளித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக அரசு ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் அவரை உண்மையான தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை திமுக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story