அ.தி.மு.க.வில் இருந்து 22 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கியது செல்லாது


அ.தி.மு.க.வில் இருந்து 22 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கியது செல்லாது
x

அ.தி.மு.க.வில் இருந்து 22 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கியது செல்லாது

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

அ.தி.மு.க.வில் இருந்து 22 பேரை ஓ.பன்னீசெல்வம் நீக்கியது செல்லாது என நாகையில், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.

சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்ட ஓ.எஸ்.மணியன் நேற்று நாகை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அவரை முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நகர செயலாளர் தங்க கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் படத்திற்கு மாலை அணிவித்த ஓ.எஸ்.மணியன், கட்சி அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் படத்தை அகற்றினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கும் ஓ.எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் குறுவை தொகுப்பு என்ற பெயரில் ஒரு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தால் பயன் யாருக்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யும்போது குறுவை தொகுப்பு எண்ணிக்கை வெறும் 560 என்ற நிலை உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வழங்க வேண்டும். தனியாரிடம் சென்று வாங்கும் நிலையை அரசு உருவாக்கக்கூடாது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கியது செல்லாது

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும் என்பது போல் அவர் கூறியிருப்பது உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து 22 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கியது செல்லாது.

தடம் மாறமாட்டார்கள்

அ.தி.மு.க.வை சட்ட விதிகளின்படி வளர்ச்சி பாதைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். பொதுக்குழு ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி நடத்தப்பட்டது.

அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் தடம் மாற மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story