கல்லறை திருநாள் அனுசரிப்பு


கல்லறை திருநாள் அனுசரிப்பு
x

உதயேந்திரத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயம் கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கல்லறை தோட்டத்தில் உள்ள தங்களது உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து புதிய வண்ணங்கள் தீட்டினர்.

மாலையில் பங்குதந்தை மாறன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது இறந்து போன தங்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டனர். மேலும் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், பூக்களால் அலங்கராம் செய்திருந்தனர். இதே போன்று வாணியம்பாடி கோணாமேடு சகாயமாதா ஆலயம் கல்லறை தோட்டத்திலும் கல்லறை திருநாள் வழிபாடு செய்தனர்.


Next Story