இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு; ஆர்.டி.ஓ. தலைமையில் மீட்பு


இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு; ஆர்.டி.ஓ. தலைமையில் மீட்பு
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆர்.டி.ஓ. தலைமையில் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பகுதிக்கு ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஒ. சைலேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது குறித்து தாசில்தாரிடம் கேட்டறிந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. சைலேந்திரன் முன்னிலையில் தாசில்தார் ஜெயகாந்தன், கிராம நிர்வாக அலுவலர் கஜேந்திரன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றினர்.

இது குறித்து ஆர்.டி.ஓ. கூறுகையில்,

அரசுக்கு சொந்தமான 40 சென்ட்டுக்கும் அதிகமாக உள்ள இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 50 லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்தார். நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடம் இருளர் இன மக்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடம் என தெரிவித்தார்.


Next Story