கடலியல் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு (எ) சிவ பாலசுப்ரமணி காலமானார்.!
கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு (எ) சிவ பாலசுப்ரமணி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சென்னை,
ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்பட்ட கடலியல் வரலாற்று ஆய்வாளரின் இயற்பெயர் சிவ பாலசுப்ரமணி. இவருக்கு வயது 60. இவர் ஆமைகள் மூலம் நீர் வழித்தடம் குறித்தும், பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டது குறித்தும் கண்டறிந்தவர். குமரிக்கண்டம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஒரிசா பாலுவின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story