மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கிய டாக்டர்


மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கிய டாக்டர்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:30 AM IST (Updated: 6 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கிய டாக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பல் சொத்தையால் அவதிப்பட்டார். எனவே அவர் கடையம் பகுதியில் உள்ள பல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவரது சொத்தைப்பல்லை மட்டும் பிடுங்கி எடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார். தொடர்ந்து அவர், வாலிபரின் முகத்தாடையில் மயக்க ஊசி செலுத்திய பின்னர் பல்லை பிடுங்கி எடுக்க முயன்றார். அப்போது பாதி பல் மட்டும் உடைந்து வந்தது.

பல் பிடுங்கும் போது டாக்டர் மதுபோதையில் இருந்ததாக கூறி, அவரிடம் அந்த வாலிபர் முறையிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். மேலும் அவருடன் வந்த உறவினரும், நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மதுபோதையில் சிகிச்சை அளிக்கலாமா?, நீங்கள் மது குடிக்கவில்லையென்றால் ரத்த பரிசோதனை செய்யலாமா? என்று கேட்டார்.

அப்போது டாக்டர், மது அருந்தியதாகவும், சிகிச்சைக்கு ஒத்துழைத்தால் இன்னும் 5 நிமிடத்தில் மீதியுள்ள பல்லையும் எடுத்து விடுவதாகவும் கூறினார். எனினும் அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெறாமல், மற்றொரு ஆஸ்பத்திரிக்கு வாலிபர் சென்று, மீதி பல்லை எடுத்தார்.

மதுபோதையில் பல் பிடுங்கிய டாக்டரிடம் வாலிபர் முறையிட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.



Next Story