கரும்பு விவசாயிகளுடன் அதிகாரி ஆலோசனை


கரும்பு விவசாயிகளுடன் அதிகாரி ஆலோசனை
x

மோகனூரில் கரும்பு விவசாயிகளுடன் அதிகாரி ஆலோசனை செய்தனார்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூரில் செயல்படும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், தமிழக சர்க்கரைத்துறை கமிஷனர் விஜயகுமார், மோகனூர் பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் நேரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து சர்க்கரை ஆலையின் அனைத்து பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா உடனிருந்தார். தொடர்ந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் குப்புதுரை, பொருளாளர் வரதராஜன் ஆகியோர் தமிழக சர்க்கரை துறை கமிஷனர் விஜயகுமாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு நிலுவை தொகை வழங்க, தமிழக அரசிடம் வழிவகை கடன் போர்க்கால அடிப்படையில் பெற்றுதர வேண்டும். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை லாபத்தில் கொண்டுவர மொளாசஸில் இருந்து எத்தனால் தயாரிக்க, 2023-24-ம் ஆண்டு அரவை பருவத்தில் எரிசாராய ஆலையை நவீனப்படுத்தி எத்தனால் உற்பத்தியை விரைந்து தொடங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயும், நடவு மானியமாக ஒரு ஏக்கருக்கு, ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஆலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இணை மின் திட்டப்பணியை 2023-24-ம் ஆண்டு அரவை பருவத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்ட சானிடைசருக்கு ரூ.18 லட்சம் வரவில்லை. அவற்றை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுடன், எவ்வித ஆவணமும் இன்றி வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story