பதாகைகளை வழங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு
பதாகைகளை வழங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆட்டோ டிரைவர்களிடம் விழிப்புணர்வு பதாகைகளை வழங்கி வருகின்றனர். அதை ஆட்டோ ஸ்ேடண்டுகளில் பொதுமக்கள் கண்ணில் படும் வகையில் ஒட்டி வைக்க வலியுறுத்தினர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்ற பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வலியுறுத்தி வருகிறோம். தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வழங்கிய பதாகைகளை சினிமா தியேட்டர்கள், ஆட்டோ ஸ்டேண்டுகள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.