சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு


சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நடைபெற்று முடிந்த நெடுஞ்சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை சென்னை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை பணிகளை உள் தணிக்கை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறை அரியலூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் முத்துவாஞ்சேரி-ஸ்ரீபுரந்தான் சாலையில் முத்துவாஞ்சேரி அருகில் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் நடைபெற்று முடிந்த 3.2 கிலோ மீட்டர் சாலை பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அரியலூர் கோட்ட பொறியாளர் உத்தண்டி, தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள் தணிக்கை விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி, உதவி கோட்ட பொறியாளர் லட்சுமி கலா, நெடுஞ்சாலைத்துறை ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் கருணாநிதி, ஜெயங்கொண்டம் உதவி பொறியாளர் விக்னேஷ் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story