வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு


வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு
x

சிவகாசி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய விருதுநகர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) அரவிந்தன் நேற்று சிவகாசி வந்தார். அப்போது அவர் ஆனையூர் பஞ்சாயத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுர மையத்தை ஆய்வு செய்து அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி, செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, ஆனையூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன், பஞ்சாயத்து செயலர்கள் நாகராஜன், கனகமுத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



Next Story