ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு


ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
x

ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

ஊரக வேலை உறுதி திட்ட பணிகளைஅதிகாரி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 100 நாலள் வேலை திட்டப்பணிகள் நடக்கின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை, இந்த பணிகளை மாவட்ட குறை தீர்வு அலுவலர் கோபிநாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, இத்திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக என்னை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்தார். 100 நாள் வேலை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து100 நாள் வேலை அனைவருக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படும். 100 நாட்களில் இருந்து உயர்த்தி வேலை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் மரியப்பிரகாசி கிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால், ஊராட்சி செயலாளர் சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story