கீழக்கரை மீன்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
கீழக்கரை மீன்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கெட்டு போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம்
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் ஆகியோர் இணைந்து கீழக்கரையில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அனைத்து மீன் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா? எனவும் மீன்களில் ஏதும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் 12 கிலோ கண்டறியப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story