நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் வி.களத்தூர் நேரடி கொள்முதல் நிலையங்களில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. திருச்சி மண்டல குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனம், பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசார் நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர். இதில், நெல் மூட்டைகள் முறைப்படி கொள்முதல் செய்யப்படுகிறதா? ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா?என்று ஆய்வு செய்தனர்.


Next Story