அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
பாவூர்சத்திரம் பகுதி அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையின் சூப்பிரண்டு சினேகா பிரியா உத்தரவுப்படி, குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை நெல்லை சரக சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் தென்காசி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் புளியரை, கற்குடி, ஆகிய இடங்கள் உள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் குறைகள் ஏதேனும் உள்ளதா? என்பதை கேட்டு அறிந்தனர்.
Related Tags :
Next Story