ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு


ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 April 2023 7:00 PM GMT (Updated: 18 April 2023 7:00 PM GMT)

தாண்டிக்குடி ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ் மலைப்பகுதி தாண்டிக்குடியில் ரேஷன் கடையில் கடந்த மாதம் அரிசி தரமற்ற முறையில் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு பில் மட்டும் போட்டுவிட்டு இந்த மாதம் அரிசி வழங்குவதாக விற்பனையாளர் கூறியுள்ளார். ஆனால் இந்த மாதம் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கார்டுதாரர்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்று தாண்டிக்குடி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தாண்டிக்குடியில் உள்ள ரேஷன் கடையில் கொடைக்கானல் வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், பொது வினியோக திட்ட அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் கேட்டறிந்தனர். விற்பனையாளரிடம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடை திறந்து இருக்க வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Related Tags :
Next Story