சோலார் அருகே மது விற்ற உணவகத்துக்கு அதிகாரிகள் 'சீல்'
சோலார் அருகே மது விற்ற உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’
ஈரோடு
சோலார்
சோலார் அருகே உள்ள 46 புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் உரிய அனுமதியில்லாமலும், கலெக்டரின் உத்தரவை மீறியும் மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த உணவகத்துக்கு மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 16 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் உணவக உரிமையாளர் தேவேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story