கோவில் திருவிழா தற்காலிக கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


கோவில் திருவிழா தற்காலிக கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

நாகர்கோவிலில் கோவில் திருவிழா தற்காலிக கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். காலாவதியான குளிர்பானம், ரசாயன கலர்பொடியை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கோவில் திருவிழா தற்காலிக கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். காலாவதியான குளிர்பானம், ரசாயன கலர்பொடியை பறிமுதல் செய்தனர்.

ரசாயன கலர்பொடி பறிமுதல்

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் திருவிழாவையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள சில கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகனுக்கு புகார் வந்தது. இதனையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் நாகர்கோவில் மாநகர உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கர நாராயணன் மற்றும் மாநகர சுகாதார ஆய்வாளர் ஜான், உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் அங்குள்ள தற்காலிக கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள 2 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் பயன்படுத்த தகுதியற்ற ரசாயன கலர் பொடிகள் போன்ற போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

பழக்கடைகளில் ஆய்வு

இதனை தொடர்ந்து வடசேரி சந்தையில் உள்ள பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 2 கடைகளில் அழுகிய பலாப்பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுபற்றி அதிகாரிகளிடம் கடை உரிமையாளர்கள் கூறுகையில், "அந்த பலாப்பழங்கள் அனைத்தும் பன்றிகளுக்கு உணவாக மொத்தமாக சிலர் இரவில் வாங்கி செல்வார்கள்" என்றனர்.

மேலும் ஒரு கூடையில் சற்று அழுகிய பலாப்பழங்கள் இருந்தது. அதே சமயத்தில் "அழுகிய பலாப்பழங்கள் விற்பனைக்கு அல்ல" எனவும் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.


Next Story