"கோவில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும்" - மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை


கோவில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் - மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
x

கோவில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என்று மதுரை ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது.

மதுரை,

தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கைவசம் உள்ளதாகவும், அவற்றை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சியைச் சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையின் நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, தருமபுரம் ஆதின மடத்திற்கு சொந்தமான இடங்களில் அளவீடு பணியில் அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் கோவில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என எச்சரித்தனர். மேலும் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story