பெருங்காவூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்துக்கு தைல மரங்கள் ஏலம்
பெருங்காவூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்துக்கு தைல மரங்கள் ஏலம் விடப்பட்டது.
திருவள்ளூர்
பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்காவூர் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் தைல மரங்கள் வளர்த்து வந்த நிலையில் வனத்துறையின் மதிப்பீட்டின் அடிப்படையில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுவிட்டிகோபி, துணைத்தலைவர் சுகாசினிசரவணன், மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், சுதாஅருள், நாகு, சிலம்பரசன், புவனேஸ்வரி, சுப்த்ராசந்திரன், தேவகி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் அபிநாத் ஏலத்தை வாசித்தார். அப்போது ஏலம் எடுப்பதற்கு முன் பணம் கட்டிய தனியார் ஒருவர் ரூ.11 லட்சத்து 44 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
Related Tags :
Next Story