சாலையில் குழி தோண்டி ஒகேனக்கல் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள்


சாலையில் குழி தோண்டி ஒகேனக்கல் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள்
x
தர்மபுரி

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே உள்ள பாகலஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பச்சையப்பன்கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் 3 இடங்களில் மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டி உள்ளனர். மேலும் கிராமத்திற்கு செல்லும் ஒகேனக்கல் குடிநீர் குழாய் இணைப்பை அவர்கள் துண்டித்து உள்ளனர். இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இது பற்றி தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மண் சாலையில் குழி தோண்டி, ஒகேனக்கல் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story