ஏரியில் மூதாட்டி பிணம்


ஏரியில் மூதாட்டி பிணம்
x

சிங்காரப்பேட்டை அருகே ஏரியில் மூதாட்டி பிணம்; தற்கொலையா? போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே தீர்த்தகிரி வலசை பெரிய ஏரியில் பெண் ஒருவரின் பிணம் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்வின், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டனர். இதில் கரை ஓரத்தில் கைப்பை மற்றும் காலணி இருந்துள்ளது. இதனை சோதனை செய்து பார்க்கும் போது, இறந்த நபர் விவரங்கள் தெரியவந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் புதுத்தெரு பகுதியை சேர்ந்த பட்டாபி என்பவரின் மனைவி சுமதி (வயது 60) என்பது தெரிய வந்தது. முதல் கட்ட தகவலில் அவரது கணவர் பட்டாபி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மன உளைச்சல் அடைந்த சுமதி சிங்காரப்பேட்டை தீர்த்தகிரி வலசை பெரிய ஏரியில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story