மூதாட்டி மர்மசாவு


மூதாட்டி மர்மசாவு
x

மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே உள்ள நெருஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி காளியம்மாள் (வயது 80). சண்முகம் ஏற்கனவே இறந்துவிட்டார். காளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் இரவு தூங்க சென்ற அவர் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது காளியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோவிலாங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காளியம்மாள் அணிந்திருந்த தோடு, செயின் ஆகியவை காணாமல் போனதாக கூறப்படுகிறது. கமுதி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் கோவிலாங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story