ஆம்புலன்சில் மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய முதியவர் கைது


ஆம்புலன்சில் மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய முதியவர் கைது
x

அரூர் அருகே ஆம்புலன்சில் மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

உபகரணங்கள் சேதம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எருமியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசு (வயது 35). 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர். இவருக்கு எருமியாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் தலையில் காயங்களுடன் சாலையோரம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆம்புலன்சுடன் அவர் அங்கு சென்றார். பின்னர் அவர் சாலையோரம் கிடந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரம் கிடந்த அந்த நபர் சிலம்பரசு மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை தரக்குறைவாக பேசி திட்டியதாகவும், ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிலம்பரசு கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தகராறில் ஈடுபட்டவர் குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (62) என தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story