முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 5:19 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பயணிகள் நிழற்குடையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் நேற்று முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பார்த்தனர். தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் கோத்தகிரி சோலூர்மட்டம் அருகே கடசோலை பட்டிக்கம்பை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி லட்சுமணன் (வயது 65) என்பது தெரியவந்தது. இவருக்கு செல்வபாக்கியம் (64) மற்றும் புஷ்பராணி (50) என 2 மனைவிகளும், 4 மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். அவர்கள் கோவையில் வசித்து வரும் நிலையில், லட்சுமணன் கூலி வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story