காவிரி ஆற்று பாலத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை


காவிரி ஆற்று பாலத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2023 1:00 AM IST (Updated: 23 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:-

பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தின் மீது சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ேநற்று மாலை நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் ஆற்று பாலத்தில் இருந்து குதித்தார். அவர், நீர்வரத்து இல்லாத பாறைகள் மீது விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story