பண்ருட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை தனது சாவுக்கு பொதுமக்கள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு


பண்ருட்டி அருகே    முதியவர் விஷம் குடித்து தற்கொலை    தனது சாவுக்கு பொதுமக்கள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு
x

பண்ருட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது சாவுக்கு பொதுமக்கள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர்

பண்ருட்டி,

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் தில்லை கோவிந்தன் (வயது 65). திருமணமாகாத இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனிமையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நேற்று வருவாய்த்துறை மூலம் அகற்றப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள், தில்லைகோவிந்தனால் தான் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டதாக நினைத்து அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதில் மனமுடைந்த தில்லைகோவிந்தன், தனது சாவுக்கு தங்கள் பகுதி மக்கள், தன்னை திட்டியதே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து, தில்லைகோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தில்லைகோவிந்தன் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய சாவுக்கு தனது பகுதி பொதுமக்கள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story