விஷம் குடித்து முதியவா் தற்கொலை
தியாகதுருகம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபக்தர்(வயது 68). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் கால்கள் நடக்க முடியாமல் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கிருஷ்ணபக்தர் பூச்சி மருந்து குடித்து வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மருமகள் பரமேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணபக்தரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்த்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story