குளத்தில் மூழ்கி முதியவர் பலி


குளத்தில் மூழ்கி முதியவர் பலி
x

குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள கலிய ராயன்விடுதியை சேர்ந்தவர் மலைக்கொழுந்து (வயது 76). விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு நேற்று முன்தினம் மாலை குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடினர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் குளத்தின் நடுவே சேற்றில் சிக்கிய நிலையில் கிடந்த முதியவர் மலைக்கொழுந்து உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story