கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்


கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்
x

கிணற்றில் முதியவர் பிணமாக மிதந்தார்.

பெரம்பலூர்

குன்னம்:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள தொளார்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி(வயது 80). இவர், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வசிஸ்டபுரம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது மகள் வீட்டில் இல்லாதபோது, அகரம்சிகூரில் உள்ள மதுபான கடைக்கு கணபதி சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து கணபதியை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வசிஸ்டபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் முதியவர் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவலின்பேரில், வேப்பூர் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று கிணற்றில் இறங்கி, முதியவர் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், கிணற்றில் பிணமாக மிதந்தது கணபதி என்பது தெரியவந்தது. மேலும் அவர் நிலை தடுமாறி பாழடைந்த அந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து முதியவர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story