திருவண்ணாமலையில் சுற்றித் திரியும் லண்டனை சேர்ந்த முதியவர் புற்றுநோயால் அவதி - உதவி கேட்டு அரசுக்கு கோரிக்கை


திருவண்ணாமலையில் சுற்றித் திரியும் லண்டனை சேர்ந்த முதியவர் புற்றுநோயால் அவதி - உதவி கேட்டு அரசுக்கு கோரிக்கை
x

திருவண்ணாமலையில் சுற்றித் திரியும் லண்டனை சேர்ந்த முதியவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இப்படி வருகை தரும் பக்தர்களில் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் ஆன்மீக பயணமாக திருவண்ணாமலைக்கு அடிக்கடி வருகின்றனர்.

அவ்வாறு 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வருகை தந்த லண்டனைச் சேர்ந்த முதியவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். அவர் தனக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

லண்டன் முதியவர்

லண்டனை சேர்ந்தவர் கிளைவ் பிரட்ரிக் நியூமேன்(வயது 79). ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். நாளடைவில் அவர் திருவண்ணாமலை வாசியாகவே மாறினார். இந்தநிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலையின் இடது பக்கம் முழுவதும் புண்கனாகி உள்ளது. இவர் திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

இவரை சமூக ஆர்வலர் ஒருவர் மீட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story