முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x

முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 68). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்வத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story