சின்னசேலம் அருகேவாகனம் மோதி முதியவர் பலி
சின்னசேலம் அருகே வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே தாகம் தீர்த்தபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 76). இவர் அடிக்கடி, வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்பவர், 10 நாட்களுக்கு பிறகு தான் வீடு திரும்புவார்.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி இரவு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு சென்றுள்ளார். வி.கூட்டு ரோடு- விருத்தாசலம் சாலையில் ராயப்பனூர் எல்லையில் சென்ற போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story