பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T00:15:20+05:30)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தினார்.

ராமநாதபுரம்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளருமான செல்வகுமார் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக வருகிற 13-ம் தேதி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநாடு நடைபெற உள்ளது. பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் கேட்டு ஒற்றை கோரிக்கை மட்டும் முன் வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தேர்தல் வாக்குறுதி தராத மாநிலங்களான ராஜஸ்தான் ஜார்கண்ட் சத்தீஸ்கர் மாநிலங்களிலும், தேர்தல் வாக்குறுதி அளித்த பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று சொன்ன தமிழக முதல்-அமைச்சர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் ரத்து செய்யவில்லை. இதனை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தியும் சென்னையில் மாநில மாநாடு நடைபெறுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் பல போராட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.

தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தி.மு.க. அரசு மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடக்கிறது. அது குறித்த பிரசார இயக்கம் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.


Next Story