தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே எல்.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி குப்பு (வயது 70). இவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் நேற்று காலை தனது வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குப்பு இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story