வாகனம் மோதி மூதாட்டி சாவு
பனவடலிசத்திரம் அருகே வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி
பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 75). இவருடைய மனைவி கோமதி (70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கோமதி பனவடலிசத்திரம் பசும்பொன் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கோமதி அப்பகுதியில் நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் கிடந்த அவர் மீது, அந்த வழியாக வந்த வாகனங்கள் ஏறி இறங்கின. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story