கார் மோதி மூதாட்டி பலி


கார் மோதி மூதாட்டி பலி
x

ஜலகண்டாபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

சேலம்

மேச்சேரி

ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி பச்சகுப்பனூரை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 60). இவர், ஜலகண்டாபுரம்- நங்கவள்ளி மெயின் ரோடு சூரப்பள்ளி என்ற இடத்தில் பால் விற்பனை செய்வதற்காக சாலையை கடந்து சென்றார். அந்த வழியாக வந்த கார், அய்யம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story