"ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்படாது"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது;
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக மாறாது. 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை நான் கூறிவிட்டேன். மருத்துவ தேவை அதிகரித்துவரும் நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை; இறப்பும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Related Tags :
Next Story