அச்சரப்பாக்கம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல் - போக்குவரத்து பாதிப்பு


அச்சரப்பாக்கம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
x

அச்சரப்பாக்கம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு,

மதுராந்தகம் அருகே தொழுப்பேடு பகுதியில் லாரி மீது தனியார் பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.

அதன் பின்னே நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி தனியார் பஸ் மோதியதில் பேருந்து டிரைவர் மட்டும் லேசான காயமடைந்தார். இதன் காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அச்சரப்பாக்கம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story