நடிகை விஜயலட்சுமி மீதுநாம் தமிழர் கட்சியினர் புகார்


நடிகை விஜயலட்சுமி மீதுநாம் தமிழர் கட்சியினர் புகார்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் கொடுத்தனர்.

தேனி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தேனி மண்டல செயலாளர் பிரேம்சந்தர் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி மற்றும் அவரோடு சேர்ந்து வீரலட்சுமி என்பவரும் அவதூறு பரப்பி வருகின்றனர். பணம் பறிக்கும் நோக்கில் அவர்கள் அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story