டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கணித புதிர் போட்டி


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கணித புதிர் போட்டி
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கணித புதிர் போட்டி வருகிற 30-ந்தேதி நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின்னியல் மின்னணுவியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் 'அன்றாட வாழ்வில் கணிதம்'- புதிர் போட்டி வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பள்ளி மாணவர்கள் தங்களது கணித திறனை வெளிப்படுத்தும் விதமாக இப்போட்டி நடத்தப்படுகிறது.

இதில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் https://tinyurl.com/5n8h7yvf என்ற இணைப்பு மூலம் பங்கு பெறலாம். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய www.drsacoe.org என்ற கல்லூரியின் இணையதளத்திலும், 9894469428 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழிகாட்டுதலின்படி, துறைத்தலைவர் சிவனணைந்த பெருமாள் மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்.

--------


Next Story