டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி ஓவியப்போட்டி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இணையவழி ஓவியப்போட்டி இரண்டு நாட்கள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அமைப்பியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு 'கைப்பேசியின் பயன்பாடு' என்ற தலைப்பில் இணையவழி ஓவியப்போட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. மாணவ-மாணவிகளின் கற்பனை மற்றும் செயல்திறனை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இதில் கலந்து கொள்வதற்கு பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மற்றும் படிக்கும் மாணவ-மாணவிகள் https://forms.gle/gvQuWLBTC3xUfpc47 என்ற இணைப்பின் மூலம் பங்கு பெறலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9486204458, 9443080530 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், அமைப்பியல் துறை பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.