இந்து முன்னணி சார்பில் 200 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு

கரூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 200 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ெகாண்டாடுவது குறித்து இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் கரூர் ஜவகர் பஜாரில் நேற்று நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
200 இடங்களில் வழிபாடு
கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எங்கு எல்லாம் விநாயகர் சிலை வைப்பது, காவல்துறையில் அனுமதி, ஊர்வலம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மாவட்டம் முழுவதும் சுமார் 200 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது, வருகிற 17, 18-ந்தேதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது என்றும், 19-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.






